Trending News

தெற்கில் இன்புளுவன்சாவினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தனியார் வைத்தியசாலையிலும் சிகிச்சை

(UTV|COLOMBO)-தென்மாகாணத்தில் பரவிவரும் இன்புளுவன்சா நோய் காரணமாக சிறுவர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர்.

கராப்பிட்டிய ஆதார வைத்தியாசாலையில் நிலவும் குறைபாடுகள் காரணமாக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியசாலையில் அவசர  சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவதற்கு முடியாத நிலை நிலவுகின்றது.

 

இதன் காரணமாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தற்பொழுது தான் இது தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளருக்கு சில ஆலோசனைகள் வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.

 

தென்மாகாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் அவசர  சிகிச்சை பிரிவுகளில் அரசாங்க செலவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சை வழங்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

 

இதேபோன்று கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பிலும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Showers to reduce from tomorrow

Mohamed Dilsad

வாழ்வுரிமையை இலங்கை அரசியல் யாப்பில் சட்டமாக்கப்பட வேண்டும்

Mohamed Dilsad

கடந்த 24 மணித்தியாலத்தில் நீரில் மூழ்கி நால்வர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment