(UTV|HONG KONG)-ஹாங்காங்கில் ஊழியர்கள் யாரும் இன்றி தானாக இயங்கும் மதுக்கடை தொடங்கப்பட்டுள்ளது. இதை சீனாவின் மிகப்பெரிய இ-வர்த்தக நிறுவனமான அலிபாபா உருவாக்கியுள்ளது. முற்றிலும் தானியங்கி மையமாக்கப்பட்டுள்ள இம்மதுக்கடை ஹாங்காங்கின் வினெஸ்போ பகுதியில் உள்ளது.
அனைத்து மதுபாட்டில்களிலும் ‘டிரெக்கிங் டேக்’ எனப்படும் அடையாள குறி பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மது பாட்டில் எடுத்தவரின் உருவம் கம்ப்யூட்டர் திரையில் தெரியும். பின்னர் அவர் மதுபாட்டிலுக்குரிய பணத்தை செலுத்த அதற்கான ரசீது அறை (பீல் ரூம்) வரும் போது முக அங்கீகாரம் மூலம் அந்த நபர் உறுதி செய்யப்படுகிறார். அதையடுத்து ஆன்லைன் மற்றும் மொபைல் மூலம் பணம் பெறப்படுகிறது.
இதற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஷாங்காயில் இயங்கும் பிங்கோ பாஸ் நிறுவனம் 24 மணி நேரமும் இயங்க கூடிய தானியங்கி கடையை திறந்தது. அதே நேரம் அமெரிக்காவின் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் முதன் முறையாக கேஷியர் இல்லாத கடையை சீட்டில் நகரில் கடந்த ஜனவரியில் தொடங்கியது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]