(UTV|COLOMBO)-கொழும்பு – 02 பார்க் வீதியில் அமைந்துள்ள பர்பேச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதான அலுவலகம் நேற்று இரவு, குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் சோதனையிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன வழங்கிய சோதனை ஆணைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மத்திய வங்கி முறி தொடர்பான சில முக்கிய தகவல்களை பெற்று கொள்வதற்காகவே அந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அந்த அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் கணினிகள் என்பன அதிகளவில் சோதனையிடப்பட்டுள்ளன.
முறி விநியோகம் தொடர்பான சில ஆவணங்களை குற்ற புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்குமாறு பர்பேச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி ஜோசப் அலோசியசுக்கு கடந்த 24ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் அந்த உத்தரவை அவர் மீறியுள்ளதாக தெரிவித்தே, கோட்டை நீதவான் குறித்த அலுவலகத்தை சோதனையிடுவதற்கான அனுமதியினை வழங்கியுள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]