(UTV|INDONESIA)-இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக நேற்று முன்தினம் இந்தோனேசியா சென்ற அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று காலை போரில் வீரமரணமடைந்த ராணுவவீரர்களுக்கு மலர்வளையம் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவுடன் நடந்த பேச்சுவார்த்தையில், இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி உட்பட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இந்நிலையில், ஜகர்த்தாவில் நடைபெற்ற பட்டம் விடும் கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்தோனேசியா அதிபருடன் பட்டம் விட்டு விளையாடி உள்ளார். அந்த படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]