(UTV|COLOMBO)-மெத்சவிய உளவளக் கல்வி அபிவிருத்தி மைத்ரி மன்றத்தின் 15வது ஆண்டு விழா மற்றும் மைத்ரி பூஷண விருது விழா நேற்று (03) பிற்பகல் கொழும்பு 07 ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மன்றில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
வண. மஹஎலகமுவே லங்காநந்த தேரர், பாரம்பரிய சுதேச மருத்துவ நிபுணர் என்.பீ. ருவிந்த மாரசிங்க மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் இதன்போது ஜனாதிபதியினால் மைத்ரி பூஷண விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அகில இலங்கை அமரபுர மகாசங்க சபையின் மகாநாயக்கர் வண. கொட்டுகொட தம்மாவாச மகாநாயக்க தேரர் நிகழ்விற்கு தலைமைத் தாங்கியதுடன், ராஜகீய பண்டித வண. சன்னஸ்கல்லே ஞானவீர தேரர் இதன்போது விசேட ஆசியுரை வழங்கினார்.
புத்த பெருமானின் மஹியங்கனை நகருக்கான விஜயத்தினை சித்தரிக்கும் வண்ணம் மெத்சவிய உளவளக் கல்வி அபிவிருத்தி மைத்ரி மன்ற உறுப்பினர்களினால் மஹியங்கனை புனித பூமியில் நிர்மாணிக்கப்படும் 84 அடி உயரமான புத்த பெருமானின் திருவுருவ மாதிரியும் விசேட நினைவுப் பரிசும் மெத்சவிய மன்றத்தின் தலைவர் வித்யாகீர்த்தி போராசிரியர் சந்தன ஜயரத்னவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]