Trending News

இன்று பிரதி சபாநாயகர் தெரிவு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்திற்காக பிரதி சபாநாயகர் நியமனம் இன்று (05) இடம்பெற உள்ளது.

இன்று பாராளுமன்றம் கூடும் போது பிரதி சபாநாயகர் ஒருவர் தெரிவு செய்யப்பட உள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவெல கூறினார்.

பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக இருந்த திலங்க சுமதிபால அரசாங்கத்தில் இருந்து விலகியதையடுத்து அந்தப்பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

அவர் விலகிக் கொண்டது தொடர்பாக இன்று சபாநாயகரால் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட உள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி சார்பாக பிரதி சபாநாயகர் பதவிக்கு சுதர்ஷனி பெர்ணாந்தோபுள்ளேயின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் கூடவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறினார்.

எவ்வாறாயினும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அந்தப் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் முன்வந்தால் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இதேவேளை இன்று பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக கட்சித் தலைவர்களின் சந்திப்பொன்று இடம்பெற உள்ளது.

இன்று பகல் 12.00 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

New Zealand is destroying military-style guns after ban

Mohamed Dilsad

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் உலக நாடுகள் பல கண்டனம்

Mohamed Dilsad

தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக 7 ஆயிரம் அதிகாரிகள்

Mohamed Dilsad

Leave a Comment