Trending News

தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு கடற்படையினரினால் சுத்திகரிப்பு நிகழ்வுகள்

(UTV|COLOMBO)-தேசிய சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு சூழல் பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்பு நிகழ்வுகளை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

உலக சுற்றாடல் தினத்தை குறிக்கும் முகமாக தேசிய சுற்றுச்சூழல் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் 30ஆம் திகதி முதல் இன்றுவரை இந்த சுத்திகரிப்பு நிகழ்வுகள் இடம்பெறுகின்றது.

கடல்வள சூழல் பாதுகாப்பு திணைக்களத்தினால் (MEPA) நீர்கொழும்பு நீரேரிப்பகுதியை சுத்தப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்த இத் திட்டத்திற்கு கடற்படையினர் தமது உதவிகளை வழங்கியுள்ளனர்.

இந்த நிகழ்வில் 700 க்கும் மேற்பட்ட இராணுவம், விமானப்படை ஊழியர்கள், அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் , உள்ளுர் மீனவ சமூக உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இதர கழிவுப்பொருட்களை உள்ளடக்கிய குப்பை மற்றும் சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நீரில் மிதந்து வரும் பொருட்கள் என்பன பாதுகாப்பாக அகற்றப்பட்டன.

 

கடற்படையின் மற்றுமொரு குழுவினர் கொழும்பு காலி முகத்திடலை கடந்த சனிக்கிழமை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Nana Patekar to begin shooting for ‘Kaala’ soon

Mohamed Dilsad

“Right to higher education cannot be disturbed” – Deputy Minister Eran

Mohamed Dilsad

‘சண்டக்கோழி-2’ படம் ஏப்ரல் 14 ரிலீஸ்

Mohamed Dilsad

Leave a Comment