Trending News

நடிகர்களாக அறிமுகமாகும் டி.இமான், தேவி ஸ்ரீ பிரசாத்

(UTV|INDIA)-இசையமைப்பாளர் டி.இமான், தேவி ஸ்ரீ பிரசாத் இருவரும் கதாநாயகர்களாக விரைவில் அறிமுகம் ஆகவிருக்கிறார்கள். டி.இமான் சமீபத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்தார். குண்டாக இருந்ததில் இருந்து நடிப்பதற்கான உடல்வாகுக்கு தன்னை கொண்டு வந்தார். அப்போதே நடிக்க வருவதற்கா? என்று கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் இயக்குனர் எழில் படத்தில் அவர் நடிகராக அறிமுகமாக இருப்பதாக செய்தி வருகிறது. இயக்குனர் எழில் இப்போது விஷ்ணு விஷாலை வைத்து `ஜகஜால கில்லாடி’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். அடுத்து இயக்கும் படத்தில் இமானை நடிக்க வைக்கலாம்.
இமான் போலவே தேவி ஸ்ரீ பிரசாத்தும் நடிகராக களம் இறங்கவிருக்கிறார். ஒரு பேட்டியில் “நிறைய இயக்குநர்கள் கதை சொல்லிக்கிட்டுதான் இருக்காங்க. தமிழ்லகூட நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனால் சரியான சந்தர்ப்பமும் அமைய மாட்டேங்குது. ‘ரங்கஸ்தலம்’ படத்துல நான்தான் ஹீரோவா நடிக்கணும்னு சுகுமார் சார் ஆசைப்பட்டார்.
அந்த சமயத்துல துரதிர்ஷ்டவசமா என் அப்பா தவறிட்டார். அதனால் அதுல நடிக்க முடியாமப்போயிடுச்சு. நடிக்கணும்ங்கிற ஆசை இப்போதும் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

திருப்பதியில் நடந்த நமீதா திருமண நிச்சயதார்த்தம்

Mohamed Dilsad

சாதாரண தர மாணவர்களை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட கோரிக்கை

Mohamed Dilsad

Inflation decreases in May

Mohamed Dilsad

Leave a Comment