Trending News

கணவரை அலவாங்கால் தாக்கி கொலை செய்த மனைவி

(UTV|COLOMBO)-தனது கணவரை அலவாங்கால் தாக்கி கொலை செய்த மனைவி தொடர்பான செய்தி கொக்கரல்ல – திம்பிரியாலந்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 50 வயதான நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையை மேற்கொண்ட பெண் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதோடு, சந்தேக நபரான பெண்ணுக்கும், கொலை செய்யப்பட்டுள்ள நபருக்கும் 18 மற்றும் 12 வயதான இரண்டு ஆண் பிள்ளைகளும், 8 வயதான ஒரு பெண் பிள்ளையும் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

42 வயதான குறித்த பெண் இன்றைய தினம் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதவான் விசாரணைகளும் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Prices of 95 Octane Petrol, Super Diesel increased

Mohamed Dilsad

தமது இராஜதந்திரிகளை மீள அழைக்க ரஷ்யா முடிவு

Mohamed Dilsad

நாடு திரும்பினார் ஜனாதிபதி

Mohamed Dilsad

Leave a Comment