Trending News

விஸ்வரூபம்-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

(UTV|INDIA)-கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்த டிரைலரை தமிழில் சுருதி ஹாசனும், இந்தியில் அமீர் கானும், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர்-ம் வெளியிடுகின்றனர். டிரைலருடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், விஸ்வரூபம்-2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
கமல்ஹாசன் இந்த படத்தை இயக்கி, நடித்துள்ளதுடன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தும் இருக்கிறார். ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இந்த படத்தை இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தியில் இந்த படத்தை ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து வெளியடுகின்றனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை

Mohamed Dilsad

Sri Lankan crowned Mrs World 2019 after 35 years

Mohamed Dilsad

Israel demolishes homes under Palestinian control

Mohamed Dilsad

Leave a Comment