Trending News

லசந்த விக்ரமதுங்க கொலை குறித்த வழக்கு விசாரணை இன்று

(UTV|COLOMBO)-ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிஸ்ஸை காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, உப காவல்துறை பரிசோதகர் திஸ்ஸ சுகதபால ஆகியோரின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அவர்கள் பிணைக் கோரி தாக்கல் செய்த மனு கடந்த முதலாம் திகதி கல்கிஸ்ஸை நீதவான் மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது அவர்களை இன்று(12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதன்போது கல்கிஸ்ஸை காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, உப காவல்துறை பரிசோதகர் திஸ்ஸ சுகதபால பிணைக் கோரி தாக்கல் செய்த மனு குறித்து அவரது சட்டத்தரணி இரண்டு மணித்தியாலங்கள் மன்றில் விளக்கமளித்தார்.

இந்தநிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி ஜானக பண்டார, இந்த கொலை சம்பவம் தொடர்பில் மூடி மறைக்க பல்வேறு தரப்பினர் முயற்சி செய்து வருவதாக மன்றில் விளக்கமளித்தார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விளக்கத்திற்கு பின்னர் குறித்த இருவரும் இன்று வரை மீண்டும் விளக்கமறியில் வைக்கப்பட்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Showers or thundershowers expects at times today

Mohamed Dilsad

“Wrong to say Test cricket is dying” – David Richardson

Mohamed Dilsad

உங்கள் அழகை பாதுகாக்க சில டிப்ஸ்…

Mohamed Dilsad

Leave a Comment