Trending News

கொழும்பு கோட்டையில் பொதுமக்களிடம் திருடிய பொலிஸ்-(VIDEO)

(UTV|COLOMBO)-பொலிஸார் என்றாலே ஒவ்வொருவருடைய எண்ணத்திலும் வெவ்வேறு விதமான எண்ணங்கள் தோன்றக் கூடும்.

பெரும்பாலானோர் பொலிஸாரை விமர்சிக்கும் வகையிலேயே கருத்துக்களை முன்வைப்பர்.
குறிப்பாக பொலிஸார் பொதுமக்களுக்கு செய்யும் நல்ல காரியங்களை யாரும் பெரிதுப்படுத்தி பாராட்டுவது குறைவாகும்.

இந்நிலையில் கொழும்பு புறக்கோட்டையில் பொலிஸார் செய்த செயல் ஒன்று தொடர்பான காணொளி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

 

 

 

குறித்த காணொளியில்,

கொழும்பு புறக்கோட்டை போதி மரத்துக்கு அருகில் வழமை போன்று பொதுமக்கள் நிறைந்து காணப்படுகின்றனர்.

இதன்போது அங்கு நிற்கும் யுவதி ஒருவர் எதையோ ஒன்றை தேடி கொண்டிருக்கின்றார்.
இதனை அவதானித்த சில இளைஞர்கள் என்ன தேடுகின்றீர்கள்? என குறித்த யுவதிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு தன்னுடைய பணப் பையை காணவில்லை எனவும் பின்னர் அங்கு அப்பாவியாக நிற்கும் இளைஞர் ஒருவரை காட்டி அவர்தான் அந்த பணப் பையை எடுத்ததாகவும் குறித்தப் பெண் கூறியுள்ளார்.

உடனே அங்கு குழுமியிருந்தவர்கள், யுவதி காட்டிய இளைஞனை தாக்குவதற்கு முயற்சி செய்தனர்.

இதன்போது திடீரென அங்கு வந்த பொலிஸார,; இளைஞனை எதற்காக தாக்குகின்றீர்கள்? என கேட்டுள்ளனர்.

இவன் இந்த பெண்ணின் பணப் பையை திருடி விட்டான் என கோபமாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனே பொலிஸார், யுவதியிடம் உங்களின் பணப்பையின் நிறம் என்ன? என வினவிய போது அதற்கு பெண், கோப்பி நிறம் என பதிலளிக்கிறார்.

உடனே பொலிஸார் இதுவா உங்களுடைய பணப்பை என ஒரு பையை காட்டுகின்றனர்.
அதற்கு ஆம் என கூறி அதனை குறித்த யுவதி பெற்று கொள்கின்றார்.

இதைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் கோபமடைந்து குறித்த பெண்ணை திட்டுகின்றனர்.

உன்னால் இந்த அப்பாவி இளைஞனை தாக்கி இருப்போம். நல்லநேரத்தில் பொலிஸார் வந்தனர் என கூறுகின்ற நேரத்தில்,

குறுக்கிட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், இவை அனைத்தும் பொலிஸ் அதிகாரிகளால் நடத்தப்பட்ட நாடகமாகும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து அங்கு சிறிது நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பு அமைதிக்கு வந்தது.

அதாவது சமூகத்தில் ஒருவர் பொய் கூறுவதால் அது தொடர்பில் தேடி பார்க்காமல் உடனடியாக அப்பாவியான ஒருவரை தண்டிக்கின்றோம். இது தொடர்பில் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

அமைச்சின் செயலாளர்களுக்கான அறிவிப்பு…

Mohamed Dilsad

GCE A/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

Mohamed Dilsad

27 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையின் புதிய பஸ்கள்

Mohamed Dilsad

Leave a Comment