Trending News

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாளை மீண்டும் திறப்பு

(UTV|COLOMBO)-கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாளை மீண்டும் திறக்கப்படும் என அறிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி ஏஞ்சலா அருள்பிரகாசம் இதனை அறிவித்துள்ளார்.

மருத்துவ பீடத்தில் இனிமேல் பகிடிவதை தொடராது என மருத்துவ பீட மாணவர்களால் பீடதிபதிக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதியையடுத்து அந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களினால் புரியப்பட்டதாக கூறப்படும் பகிடிவதை காரணமாக கடந்த மே மாதம் 25 ஆம் திகதி முதல் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் கலவரையின்றி மூடப்பட்டது.

இந்நிலையில் மருத்துவபீட மாணவர்கள், பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது பகிடிவதை தொடராது என மருத்துவ பீட மாணவர்களால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து மருத்துவபீடத்தை நாளை மீள திறக்க இணக்கம் எட்டப்பட்டது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ඇමරිකා රජයෙන්, ශ්‍රී ලංකා ගුවන් හමුදාවට ඩොලර් මිලියන 19ක තෑග්ගක්

Editor O

அதிக எண்ணிக்கையிலான சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வருவர் – ஜோன் அமரதுங்க

Mohamed Dilsad

Sri Lanka above India, Pakistan in global healthcare index

Mohamed Dilsad

Leave a Comment