Trending News

உலக வசூலில் புதிய சாதனை படைத்த அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்

(UTV|COLOMBO)-உலகளவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படம் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாகி திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுக்க ரசிகர்களை ஈர்த்துள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 2 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்து வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. தற்போது வரை இந்த படம் 2 பில்லியன் டாலர்கள் (அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 13 ஆயிரத்து 5,17 கோடியை) வசூலித்துள்ளது.
வட அமெரிக்காவில் மட்டும் இந்த படம் 655 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. தவிர்த்து உலகம் முழுக்க 1.346 பில்லியன் டாலர்கள் வசூலாகியுள்ளது.
உலகளவில் அதிகம் வசூலித்த படங்கள் பட்டியலில் ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ நான்காவது இடத்தில் உள்ளது.
ஜேம்ஸ் கேமரானின் அவதார் (2.78 பில்லியன் டாலர்) மற்றும் டைட்டானிக் (2.18 பில்லியன் டாலர்) முதல் இரண்டு இடங்களை தக்கவைத்துள்ளன. ஸ்டார்வார்ஸ் த ஃபோர்ஸ் அவாகென்ஸ் படம் வசூலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. விரைவில் இந்த படங்களில் வசூல் சாதனைகளை ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பல சூப்பர் ஹீரோக்களும், தனோஸ் என்ற பயங்கரமான வில்லனும் நடித்துள்ளனர். மிரட்டலான அதிரடி சாகசங்கள் நிரம்பிய படமாக இந்த படம் வந்துள்ளது.
இதில் ராபர்ட் டவுனி, கிறிஸ் கெம்ஸ்வொர்த், பார்க் ரூபலா, கிறிஸ் வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Weather Alert: Landslide warnings issued for 3 districts

Mohamed Dilsad

கடும் மழை, வெள்ளம் – 7 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

විශේෂ ඩෙංගු මර්දන වැඩසටහනක් අද සිට

Mohamed Dilsad

Leave a Comment