Trending News

டிரம்ப்பையும் விட்டு வைக்காத சிவா

(UTV|INDIA)-தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்யும்படியாக உருவான `தமிழ் படம்’ படத்தின் இரண்டாவது பாகம் `தமிழ்படம் 2.0′ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.

சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதில் விஜய், அஜித், தனுஷ், மற்றும் பிரபல அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்து வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குனர் சி.எஸ்.அமுதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சுற்றி, மற்ற நாடுகளின் அதிபர்கள் நிற்பது போன்ற புகைப்படத்தை போன்று உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் புகைப்படமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சிவா, ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

விமலுக்கு நாடாளுமன்ற செயற்குழுவில் பங்கேற்க வாய்ப்பு!!

Mohamed Dilsad

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கை

Mohamed Dilsad

Ramadass seeks Sushma’s help to free 18 fishermen in Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment