Trending News

எனது பாவம் அவரை சும்மா விடாது

(UTV|INDIA)-பட வாய்ப்பு தர நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார்.

ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் செக்ஸ் தொல்லை கொடுத்தவர்கள் என்று டைரக்டர் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நடிகர் நானி என்று தொடர்ந்து பெயர்களை வெளியிட்டார். இந்த நிலையில், நடிகர் நானி மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டுக்களை ஸ்ரீரெட்டி கூறிவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நானி ஒரு நடிகையின் வாழ்க்கையை கெடுத்து நரகத்தில் தள்ளிவிட்டார். நிஜ வாழ்க்கையிலும் அவர் நடிக்க கூடியவர் என்று ஏற்கனவே ஸ்ரீரெட்டி சாடி இருந்தார். இந்த நிலையில் தெலுங்கில் நானி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் டி.வி நிகழ்ச்சியில் ஸ்ரீரெட்டியை கலந்து கொள்ளவிடாமல் தடுத்ததாக தகவல் வெளியானது.
இதனால் ஆத்திரமான ஸ்ரீரெட்டி, மீண்டும் அவர் மீது செக்ஸ் புகார் கூறினார். “நானி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடந்து கொண்டார். என்னுடன் படுக்கவில்லை என்று சத்தியம் செய்ய நானி தயாரா? எனக்கு வரும் வாய்ப்புகளை தடுக்கிறார். எனது பாவம் அவரை சும்மா விடாது.” என்று ஸ்ரீரெட்டி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீரெட்டிக்கு நடிகர் நானி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:-
“என் மீது ஸ்ரீரெட்டி அவதூறுகள் பரப்பி வருகிறார். அதில் உண்மை இல்லை. இத்தகையை செயல்கள் வருத்தம் அளிக்கின்றன. எனது நன்மதிப்பை கெடுக்கும் வகையில் பொய்யான தகவல் பரப்புவதை அவர் நிறுத்த வேண்டும். இதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். ஒரு வாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.” இவ்வாறு நானி கூறியுள்ளார்.
ஸ்ரீரெட்டி-நானி மோதல் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Shashank Manohar resigns as ICC chairman

Mohamed Dilsad

“No More Super Ministerial Portfolios” – Akila Viraj Kariyawasam

Mohamed Dilsad

Dutch emergency services hit by KPN telecoms outage

Mohamed Dilsad

Leave a Comment