Trending News

கோட்டாவின் மனு விசாரணைக்கு

(UTV|COLOMBO)-பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சட்டவிரோதமானது என்று உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை நாளை (14) விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (13) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

மனுதாரர் சம்பந்தமாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட சட்டதிட்டங்கள் சம்பந்தமாக நாளை அறிவிப்பதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிஸ்டர் ஜெனரலிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி மனு நாளை (14) விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளது.

டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரசாங்கத்தின் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை செல்லுபடிற்றதாக்கி உத்தரவிடுமாறு மனுதாரரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது மேன்முறையீட்டில் கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

COPE to discuss SAITM today

Mohamed Dilsad

Galle Face Entry Road closed due to protest

Mohamed Dilsad

Premier to launch economic development plan today

Mohamed Dilsad

Leave a Comment