(UTV|RUSSIA)-21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இங்கிலாந்து பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ், ரஷிய பாடகி எய்டா பாரிபுலினா நிகழ்ச்சிகள் கவர்ந்தது.
32 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் தொடக்க நாளாக நேற்று ஒரே ஒரு ஆட்டம் நடந்தது. ரஷியா – சவுதி அரேபியா அணிகள் மோதின.
இதில் ரஷியா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இதில் இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு ஸ்பெயின் – போர்ச்சுக்கல் (பிபிலா) அணிகள் மோதும் ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நட்சத்தி வீரரும் கேப்டனுமான ரொனால்டோவை போர்ச்சுக்கல் அணி அதிகம் நம்பி இருக்கிறது. மேலும் அந்த அணியில் புருனே ஆல்வ்ஸ், பெபே, ரபெல் குயரிரோ போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. கேப்டன் செர்ஜியோ ரமோஸ், இனியஸ்டா சில்வா, பியூ, ஜோர்டி அல்பா ஆகிய நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.
இதனால் ஸ்பெயினின் அதிரடியை போர்ச்சுக்கல் சமாளிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ரொனால்டோ தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம்.
முன்னதாக மாலை 5.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் உருகுவே – எகிப்து (ஏ) அணிகள் மோதுகின்றன. உருகுவே அணியில் லூயிஸ் சுவாரஸ், கலாஸ் ஆகியோர் பக்கபலமாக உள்ளனர்.
எகிப்து அணி முன்னணி வீரரான முகமது சலாவை நம்பி இருக்கிறது. இரவு 8.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மொராசகோ – ஈரான் (பி) மோதுகின்றன.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]