(UDHAYAM, COLOMBO) – இலங்கை மருத்துவ சபைக்கு எதிராக தனியார் மருத்துவ எதிர்ப்பு மத்திய நிலையத்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
போதுமான மருத்துவ பயிற்சியற்ற சிலர், மருத்துவ சபையால் மருத்துவர்கள் என பதிவு செய்வதற்கு ஆயத்தம் நிலவுவதாக அந்த முறைப்பாட்டில் காணப்படுகின்றது.
இவ்வாறு நடந்தால் அது நோயாளர் மற்றும் பொது மக்களின் மனித உரிமைகளை மீறும் செயல் என்பதால், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததாக தனியார் மருத்துவ எதிர்ப்பு மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் மருத்துவர் அசங்க விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.