Trending News

வவுனியா வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகம்

(UTV|VAVUNIYA)-வவுனியா நெளுக்குளம் இராசேந்திரகுளம் பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் தனக்கு பாலியல் தொந்தரவு இடம்பெற்றதாக நேற்று (18.06.2018) இரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

வவுனியா நகரில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் ஒருவர் குறித்த தனியார் வைத்தியசாலைக்கு தினசரி நோயாளிகள் மருத்துவ அறிக்கைகளை கொண்டு சென்று வழங்குவது வழக்கம்.

அதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை மருத்துவ அறிக்கைகளை எடுத்து சென்ற குறித்த பெண்ணை அந்த வைத்தியசாலையின் வைத்தியர் கட்டிப்பிடித்து பாலியல் ரீதியான தொந்தரவு செய்துள்ளார்.

அதனையடுத்து குறித்த பெண் அங்கிருத்து தப்பித்து வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனாலும் பயத்தில் இவ்விடயத்தினை வீட்டாருக்கு தெரிவிக்கவில்லை . பின்னர் குறித்த தனியார் வைத்தியசாலையின் வைத்தியர் அப் பெண்ணிற்கு குறுந்தகவல் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

அதையடுத்து நேற்று குறித்த பெண் சம்பவத்தினை பெற்றோருக்கு தெரியப்படுத்தியமையடுத்து இரவு 10 மணியளவில் பெற்றோர் அப்பெண்ணை அழைத்துச் சென்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

பாலியல் தொந்தரவுக்குள்ளாகிய பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வைத்தியரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வைத்தியர் மீது முன்னரும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Lanka IOC revises fuel prices [UPDATE]

Mohamed Dilsad

President instructs early compensation for flood affected

Mohamed Dilsad

ආසියානු කුසලාන 20-20 කාන්තා ක්‍රිකට් තරඟාවලිය දඹුල්ලේදී ඇරඹේ – නොමිලේ නැරඹීමට අවස්ථාව

Editor O

Leave a Comment