Trending News

நூறு வீதத்தால் அதிகரித்த மரக்கறி விலை

(UTV|COLOMBO)-சந்தைகளில் மரக்கறி வகைகளின் விலை நூறு வீதத்தால் அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களில் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகவே மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை வர்த்தக சங்கம் தெரிவிக்கின்றது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் தக்காளி 220 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 350 ரூபா முதல் 420 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக சங்கத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

புடலங்காய் 100 ரூபா முதல் 160 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளின் விலைகள் குறையக்கூடும் எனவும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்…

Mohamed Dilsad

Met. forecasts slight change in weather from tomorrow

Mohamed Dilsad

பிரதமர் நோர்வே நோக்கி பயணமானார்…

Mohamed Dilsad

Leave a Comment