Trending News

துனிசியாவை 2-1 என வீழ்த்தியது இங்கிலாந்து

(UTV|RUSSIA)-உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஸ்வீடன் அணி, தென்கொரியாவையும், இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் அணி, பனாமாவையும் வீழ்த்தியது. இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – துனிசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டி தொடங்கியது முதலே இங்கிலாந்து வீரர்கள் அடுத்துடுத்து கோல் போட முயற்சித்தனர். முதல் ஐந்து நிமிடத்திற்குள் இரண்டு கோல் போடும் வாய்ப்புகளை இங்கிலாந்து அணி தவறவிட்டது. முதல் பாதிநேர ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து துனிசியா வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். 35-வது நிமிடத்தில் துனிசியா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் துனிசியா அணியின் பெர்சானி சஸ்சி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனானது. முதல் பாதிநேர ஆட்டம் முசிடில் போட்டி, 1-1 என சமனில் இருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் இரண்டாவது கோல் அடித்தார். அதன்பின் துனிசியா அணியினர் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என வெற்றி பெற்றது.
இன்று நடைபெற உள்ள லீக் போட்டிகளில் கொலம்பியா – ஜப்பான், போலாந்து – செனகல், ரஷியா – எகிப்து அணிகள் பலப்பரீட்சை சென்கின்றன.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Syria Kurds say pulling out from entire length of Turkey border

Mohamed Dilsad

US comedian Amy Schumer announces pregnancy on Instagram

Mohamed Dilsad

Mainly fair weather expected

Mohamed Dilsad

Leave a Comment