Trending News

மாணவர்கள் செய்த காரியம்…

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்கள் குழுவொன்றால் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் ஒருவர் சிகிச்சைக்காக ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

நேற்று பகல் பாடசாலைக்குள் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனமடுவ நகரத்தில் இருக்கின்ற பாடசாலையொன்றில் சேவையாற்றும் ஆசிரியர் ஒருவரே தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

தொழில்நுட்ப பாடம் கற்பிக்கும் ஆசிரியரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

13ம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, சம்பவம் ஒன்றிற்காக மாணவர் ஒருவரை தண்டித்த வேளை, அந்த வகுப்பில் இருந்த ஏனைய மாணவர்கள் இணைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை ஆசிரியரால் தண்டிக்கப்பட்ட மாணவனும் சிகிச்சைக்காக ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனமடுவ பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மஹிந்தவுக்கு தேர்தல் செலவுகளுக்காக பணம் கிடைத்தது குறித்து விசாரணை தேவை

Mohamed Dilsad

Cloudy skies with showers or thundershowers expected

Mohamed Dilsad

Uruguay to sell cannabis in pharmacies from July

Mohamed Dilsad

Leave a Comment