Trending News

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கியோ விலகியோ செயற்படப்போவதில்லை

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா வெளியேறியமையால் இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் குறையும்.

 

அமெரிக்கா வெளியேறினாலும், நாம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கியோ விலகியோ செயற்படப்போவதில்லை என்பதையும் நாம் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

இவ்வாறு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

 

ஸ்ரீ லங்கா பொதுபெரமுன கட்சி அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு தள்ள திட்டமிட்ட சதி முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகிறதென அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்த அமெரிக்கா விலகியது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்கடா ராஜித சேனாரத்ன சர்வதேச மட்டத்திலிருந்து இலங்கைக்கு விடுக்கப்பட்ட பாரிய அழுத்தமொன்று குறைவடையும். இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு அமெரிக்கா முதலில் எதிர்ப்பினை வெளியிட்டது. எனினும், கடந்தகாலங்களில் இலங்கை ஐ.நா.வில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதையடுத்து, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்காவே கொண்டுவந்தது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நூட்டில் உள்ள சட்டதிட்டங்களுக்கு அமையவே சங்கைக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
.
அன்று S.W.R.D. பண்டாரநாயக்கவை படுகொலை செய்த மதகுரு மரணதண்டனையை அனுபவித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்பி.திஸாநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இரண்டு வருடங்கள் சிறை சென்றார். இவை யாவும் நீதிமன்றத்தின் தீர்ப்புகள். யாரும் மாற்ற முடியாது.
சந்தையில் பொருட்களின் விலையேற்றம் பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் இலங்கையின் வரலாற்றில் பொருட்களின் விலை ஏறி இறங்குவது வழக்கம். 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்து வகைகள் போன்றவற்றின் விலை மட்டங்கள் இன்னமும் குறைவாகவே காணப்படுகின்றன என்று அமைச்சர் கூறினார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Private bus owners Federation’s special meeting today

Mohamed Dilsad

Stern legal action against railway employees on strike

Mohamed Dilsad

மறைந்த கந்தையா நீலகண்டனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

Mohamed Dilsad

Leave a Comment