Trending News

நெல்லை பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது சட்டநடவடிக்கை – ஹரிசன்

(UDHAYAM, COLOMBO) – அரிசியின் விலையை குறைந்த மட்டத்தில் பேணுவதற்கு 200 அரிசி விற்பனையாளர்களுக்கு நெல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.

எனினும், நெல் ஆலை உரிமையாளர்கள் நெல்லை பதுக்கிவைத்துள்ளதாக அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆலை உரிமையாளர்களின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டள்ளார்.

எவ்வாறெனினும், நெற்கொள்வனவு சபையின் வசம் உள்ள 67 ஆயிரம் தொன் நெல்லை நெல் ஆலைககளுக்கு விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல் ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி மற்றும் மரகஹாமுல நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு தற்சமயம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Woods shoots level-par round at Farmers

Mohamed Dilsad

Former Chilean President Michelle Bachelet appointed as new UN Human Rights Chief

Mohamed Dilsad

‘Navy Sampath’ arrested by CID

Mohamed Dilsad

Leave a Comment