Trending News

சைட்டம் -சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

(UTV|COLOMBO)-சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பான விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றினார்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்:

முன்னைய ஆட்சிக் காலத்தில் ‘சைட்டம்’ தொடங்கப்பட்ட போது சிலர் மௌனம் காத்தார்கள். இன்று அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். எனினும் அரசாங்கத்தால் சைட்டம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடிந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத்:

பிரச்சினைக்குத் தீர்வு கண்டதை நாம் வரவேற்கின்றோம். தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதை ஆட்சேபிக்கவில்லை. எனினும் அதற்கு தராதரங்கள் அவசியம்.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன:

அரச கல்வித் துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தனியார் கல்விக்கு இடமளிக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஆஷு மாரசிங்ஹ:

தரமான உயர்கல்வி வசதிகள் தேவை.

பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார:
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை சகலருக்கும் கிடைத்த வெற்றி

இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேறு:
மருத்துவ கல்விக்காக குறைந்தபட்ச தராதரங்களேனும் அறிமுகம் செய்ய வேண்டும்.எதிர்கால சந்ததியின் கல்வி உரிமைகளைப் பறித்த எவருக்கும் இடமளிக்கப்படக் கூடாது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Cabinet approves relocation of Agriculture Ministry

Mohamed Dilsad

Lionel Messi sends message to Ronaldinho after Barcelona legend retires

Mohamed Dilsad

තැපැල් සේවක වර්ජනය ඇරඹේ

Mohamed Dilsad

Leave a Comment