Trending News

துப்பாக்கி லைசென்ஸ் கேட்கும் டோனி மனைவி

(UTV|INDIA)-இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. இவர் தலைமையிலான இந்திய அணி 2007-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது. அதன்பின் அவரது புகழ் உலகளாவிய அளவில் உயர்ந்தது. நட்சத்திர வீரரான அவர், கடந்த 2010-ம் ஆண்டு தன் பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் வாங்கினார்.

இந்நிலையில் அவரது மனைவியான சாக்‌ஷி, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக எண்ணி, தற்போது துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். பிஸ்டல் அல்லது .32 ரிவால்வர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு லைசென்ஸ் தரும்படி கேட்டுள்ளார்.

டோனி கிரிக்கெட் விளையாட சென்றுவிடுவதால், தான் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் தனியாக இருப்பதாகவும், மேலும் தனிப்பட்ட வேலைக்காரணமாக வெளியில் தனியாக செல்ல இருப்பதாலும், உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் துப்பாக்கி வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று சாக்‌ஷி விண்ணப்பத்தில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

2008-ம் ஆண்டு டோனி 9எம்எம் துப்பாக்கி வைத்திருக்க லைசென்ஸ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். அதனை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்புவதற்கு முன்பாக, டோனியிடம் நற்சான்றிதழ் வழங்குமாறு ராஞ்சி நிர்வாகம் கேட்டிருந்தது. இந்த விவகாரம் காரணமாக அந்த சமயத்தில் அவருக்கு லைசென்ஸ் கிடைக்கவில்லை. அதன்பிறகு 2010-ல் டோனிக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Wellampitiya factory employee re-remanded

Mohamed Dilsad

ඩුබායිහි අලුත්ම ගිලන්රථ සේවය

Mohamed Dilsad

உயர்தர பரீட்சை பெறுபேற்றுக்கான சான்றிதழ்கள் இன்று முதல்

Mohamed Dilsad

Leave a Comment