(UDHAYAM, CANBERRA) – அவுஸ்திரேலியாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மெல்போர்ன் நகரை நேற்று சென்றடைந்தார்.
விக்டோரியா பிராந்தியத்தின் முதல்வர் டேனியல் என்ரூஸ் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ப்ரைஸ் ஹஜன்சன் ஆகியோர் பிரதமரை வரவேற்றுள்ளனர்.
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் அவுஸ்திரேலியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தூதுக்குழு அவுஸ்திரேலிய பிரதமர், மெல்கம் டேன்புல் உட்பட முக்கியஸ்தர்கள் சிலரையும் சந்திக்க உள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையில் சில உடன்படிக்கைகளும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.