Trending News

FCID யை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ

(UTV|COLOMBO)-நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு ஆஜராகி இருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலத்தை வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (25) காலை 9 மணியளவில் அவர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு ஆஜராகி இருந்தார்.

அவரிடம் சுமார் 2 மணிநேர வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களின் 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

dengue: Over 29,000 cases reported island-wide

Mohamed Dilsad

පාසල් පවත්වන දින ගණන සංශෝධනය කරයි

Editor O

Rahul Dravid bats for alternate careers for young cricketers

Mohamed Dilsad

Leave a Comment