Trending News

நாளைய தினத்திற்குள் தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு அமைச்சர் ஹலீம்

(UTV|COLOMBO)-நாளைய தினத்திற்குள் தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாக தபால் சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம் ஹலீம் தெரிவித்துள்ளார்.

தற்போதும் தபால் சேவை ஊழியர்களின் கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாளை (26) நடைபெற உள்ள தேசிய கொடுப்பனவுகள் ஆணைக்குழு உடனான கூட்டத்தில் தபால் சேவை ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.

அதன் பின்னர் அத்தீர்மானம் அமைச்சரவையின் அனுமதியை பெற்றபின் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானத்தை அனுமதிப்பதாக தேசிய கொடுப்பனவுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

தனது தலைமுடியை டிராகன் ஸ்டைலில் கத்தரித்த அமைரா தஸ்துர்

Mohamed Dilsad

Russian national arrested for filming via drone

Mohamed Dilsad

Reema Lagoo, Bollywood’s ‘Favourite mother’ dies

Mohamed Dilsad

Leave a Comment