Trending News

இரண்டு பாதாள உலக குழு உறுப்பினர்களையும் கைது செய்ய தேடுதல் வேட்டை

(UTV|COLOMBO)-நேற்று இரவு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கிச் சூட்டு மோதலில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்ற இரண்டு பாதாள உலக குழு உறுப்பினர்களையும் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கம்புறுபிட்டிய வில்பிட்ட பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்திலேயே இந்த தேடுதல் நடவடிக்கை தற்போது இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்புறுபிட்டிய வில்பிட்ட பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான மானெல் ரோஹன எனப்படும் திலக் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 07.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கம்புறுபிட்டிய – அக்குரஸ்ஸ வீதியில் வில்பிட்ட பிரதேசத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்துமாறு கூறிய போதிலும் அவர்களின் கட்டளையை மீறி அந்த முச்சக்கர வண்டி சென்றுள்ளது.

அத்துடன் தப்பிச் சென்ற முச்சக்கர வண்டியில் இருந்தவர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் எதிர் தாக்குதல் நடத்திய போது மானெல் ரோஹன எனப்படும் திலக் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஏனைய இருவரும் தப்பிச் சென்றிருந்த நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மாகந்துரே மதூஷின் உதவியாளர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Afghan Military Officers go missing after training in US

Mohamed Dilsad

Police fired at a van in Tangalle

Mohamed Dilsad

பயங்கரவாத தாக்குதலுக்கு துணைபோன ஆஸ்திரேலியருக்கு கிடைத்த தண்டனை

Mohamed Dilsad

Leave a Comment