Trending News

சில் உடை குற்றச்சாட்டின் குற்றவாளிகள் நாம் இல்லை – லலித், அனுஷ

(UDHAYAM, COLOMBO) – கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவம் பொறித்த சில் உடைகளை விநியோகித்ததால் அரசாங்கத்திற்கு கோடி கணக்கில் நட்டம் ஏற்பட்டதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதிவாதிகளின் சாட்சி விசாரணை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சாட்சி வழங்கிய முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தான் இந்த குற்றச்சாட்டின் குற்றவாளி இல்லை என தெரிவித்துள்ளார்.

விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

இதனுடன் இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிடவும் சாட்சி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Related posts

Eight Women Gamblers Arrested

Mohamed Dilsad

Kelly Clarkson, John Legend unite for new Christmas song

Mohamed Dilsad

மழையுடனான காலநிலை மேலும் அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment