Trending News

நிதி மோசடி செய்து சிக்கிய போலி வைத்தியர்

(UTV|COLOMBO)-போலியான முறையில்  வைத்தியராக அறிமுகப்படுத்தி சுமார் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நிதி மோசடி செய்த நபர் ஒருவர் நீர்கொழும்பு குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக சந்தேகநபருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பமுனுகம, கந்தானை, கொழும்பு, நீர்கொழும்பு ஆகிய பிரசேங்களில் சந்தேகநபர் மோசடி செய்துள்ளதுடன், பல நபர்களிடம் நிதி மோசடி செய்து, கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் ஹேட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து வைத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் இன்று (28) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Lalkantha granted bail

Mohamed Dilsad

Kiran to host talks on Batticaloa Campus

Mohamed Dilsad

Relief package for business sectors to be announced in Parliament

Mohamed Dilsad

Leave a Comment