Trending News

கடவுச்சீட்டு சம்பந்தமான பிரச்சினைக்கு அடுத்த வாரமளவில் தீர்வு

(UTV|COLOMBO)-கடவுச்சீட்டு சம்பந்தமாக காணப்படுகின்ற பிரச்சினைகள் அடுத்த வாரமளவில் சரிசெய்யப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.

அனைத்து நாடுகளுக்கும் என்று வழங்கப்படுகின்ற கடவுச்சீட்டு வகையில் கடந்த நாட்களில் பிரச்சினை ஏற்பட்டிருந்ததாக அந்த திணைக்களத்தின் கடவுச்சீட்டு பிரிவின் அதிகாரி பீ.ஐ. லியனாரத்ன கூறினார்.

கடவுச்சீட்டுக்களை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக புதிய முறையில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததால் அனைத்து நாடுகளுக்கும் என்று வழங்கப்படுகின்ற கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதில் தாமதம் நிலவியதாக அவர் கூறினார்.

இதன்காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் வழங்கப்படுகின்ற கடவுச்சீட்டில் அனைத்து நாடுகளுக்கும் என்று குறித்து வழங்கியதாக பீ.ஐ. லியனாரத்ன கூறினார்.

அடுத்த வாரமளவில் அனைத்து நாடுகளுக்கும் என்று விநியோகிக்கப்படுகின்ற கடவுச்சீட்டு தமக்கு கிடைத்துவிடும் என்று அவர் மேலும் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாட்டின் இன்றைய காலநிலை…

Mohamed Dilsad

5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Mohamed Dilsad

LTTE armoury detected in Vishwamadu

Mohamed Dilsad

Leave a Comment