Trending News

பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாண தளத்திற்கு ஜனாதிபதி விஜயம்

(UTV|POLANNARUWA)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சீன அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க சீன அரசாங்கத்தின் நன்கொடையாக கிடைக்கப்பெற்ற, பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்.

தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாண தளத்திற்கு நேற்று காலை திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, அதன் நிர்மாணப் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

 

சிறுநீரக நோயினால் அவதிப்படும் மக்களுக்காக நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி கொண்டிருந்த நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில், ரூபா 12,000 மில்லியன் செலவில் தெற்காசியாவில் விசாலமான சிறுநீரக மருத்துவமனையாக இது நிர்மாணிக்கப்படுகின்றது.

 

வடமத்திய மாகாணத்தில் மாத்திரமன்றி, நாடு பூராகவும் காணப்படும் சிறுநீரக நோயாளிகளுக்காக நிர்மாணிக்கப்படும் இந்த மருத்துவமனை உலகின் நவீன ஆய்வுகூட மற்றும் தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது.

 

24 மாத காலத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ள இச்செயற்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை 2020 ஜூலை மாதத்தில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

 

மருத்துவமனையின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்தி, அதன் அனுகூலங்களை அப்பாவி சிறுநீரக நோயாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்

Mohamed Dilsad

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

Mohamed Dilsad

Suspect in possession of 3.83 kg Kerala cannabis apprehended

Mohamed Dilsad

Leave a Comment