Trending News

விபத்தில் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியில் மியன்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் லொறியின் சாரதி உட்பட மூன்று பேர் காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாரதி உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த ஏனைய இரண்டு பேரும் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி

Mohamed Dilsad

Gotabaya Rajapaksa takes oath as 7th Executive President of Sri Lanka

Mohamed Dilsad

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

Leave a Comment