Trending News

கல்வி கட்டமைப்புடன் விளையாட வேண்டாம்-அமைச்சர் அகில

(UTV|COLOMBO)-நாடளாவிய ரீதியிலுள்ள அரச பாடசாலைகள் எதுவும் இன்று (04) மூடப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

சில தனிநபர்களின் தேவைகளுக்காக நாட்டு கல்வி கட்டமைப்புடன் விளையாட வேண்டாம் எனவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போலியான பிரசாரங்களை ஊடகங்கள் ஊடாக வழங்குவதை தவிர்ந்து கொள்ளுமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறான போலியான தகவல்களை வெளியிடுவதனால், 42 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டவர்கள் என்ற போர்வையில் கல்வித் துறையிலுள்ள 1000 பேருக்கு அரசாங்கம் பதவி உயர்வுகளை வழங்க எடுத்துள்ள தீர்மானத்துக்கு, எதிர்ப்புத் தெரிவித்து கல்வித்துறையிலுள்ள சகல தொழிற்சங்கங்களும் இன்று சுகயீனப் போராட்டமொன்றை நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

O/L Exams to commence on Dec. 03

Mohamed Dilsad

UK Parliament dissolves ahead of election

Mohamed Dilsad

මාලිමාවට බලය හිමි සභා දෙකක අයවැය පරදී

Editor O

Leave a Comment