Trending News

பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து

(UTV|COLOMBO)-யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இன்று (04) முதல் இரண்டு வாரங்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது.

வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கைக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக குடநாட்டின் பல இடங்களிலும் வாள்வெட்டுச் சம்பவங்கள், பாலியல் துஷ்பிரயோகம், கொலை போன்ற வன்முறைகள் இடம்பெற்று வருகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து ஆவா குழுவின் அட்டகாசங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸாரால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கையில்

Mohamed Dilsad

PATA Annual Summit 2017 welcomes over 400 delegates to Sri Lanka

Mohamed Dilsad

கிறிஸ் கெயிலுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்

Mohamed Dilsad

Leave a Comment