Trending News

72 வயது மகனை சுட்டுக்கொன்ற 92 வயது தாய்

(UTV|AMERICA)-அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தை சேர்ந்த 92 வயது அன்னா மே ப்லஸிங், அவருடைய 72 வயது மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்தனர். இந்த கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ப்லஸிங் தெரிவித்ததெல்லாம் அதிர்ச்சி ரகம்.

வயது முதிர்ச்சி காரணமாக ப்லஸிங்-கை பார்த்துக்கொள்வதில் சிரமம் இருப்பதாக அவரது மகன் அடிக்கடி அவரிடம் தெரிவித்துள்ளார். ஒரு நாள் மனைவியின் பேச்சை கேட்டு அவரது மகன் அன்னா மே ப்லஸிங்-கை முதியோர் காப்பகத்தில் சேர்த்து விட முடிவு செய்துள்ளார்.

இந்த தகவலை ப்லஸிங்கிடம் தெரிவித்தபோது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து மிகவும் வருந்தியுள்ளார். இருப்பினும் அவரது மகன் அவரது முடிவில் இருந்து பின் வாங்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ப்லஸிங், மகனின் அறைக்கு அவரது கணவர் பயன்படுத்திய இரண்டு கை துப்பாக்கிகளை நேற்று மறைத்து எடுத்து சென்றுள்ளார். அங்கு தூங்கிக்கொண்டிருந்த மகனை நோக்கி சுட்டு கொலை செய்துள்ளார். அதைத்தொடர்ந்து, மருமகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் ப்லஸிங்-கை கைது செய்ய முயன்றனர், ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளார். இறுதியாக அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

92 வயதாகும் தாய், பெற்ற மகனையே துப்பாக்கியால் சுட்டுகொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Parliamentary debate on actions of Constitutional Council today

Mohamed Dilsad

Mathews plays saviour again as Sri Lanka defy New Zealand

Mohamed Dilsad

கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளராக லலித் விக்ரமரத்ன

Mohamed Dilsad

Leave a Comment