(UDHAYAM, COLOMBO) – இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் அடையாளத்தை அரசாங்கம் சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாக மஹிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை தடை செய்யுமாறு வலியுறுத்தி மஹிந்த அணியின் தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று கொழும்பு கோட்டையில் துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்தது.
இதன்போதே மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
மருத்துவ கல்வி தொடர்பான அடிப்படை தரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சனை தொடர்பில் அரசாங்கத்தின் சகிப்பு தன்மைக்கும் எல்லை இருப்பதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கம்பளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.