Trending News

காணிப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள த.தே.கூ.

(UDHAYAM, COLOMBO) – முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நிலவும் காணிப் பிரச்சினை தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இதனை நேற்று கேப்பாபுலவு மக்களிடம் கூறியுள்ளார்.

தங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் 2 வாரங்களுக்கு மேலாக மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்களும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களை நேற்று சந்தித்த சிறிதரன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் செய்தியை அவர்களுக்கு தெரியப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதன்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளரை சந்திக்க முயற்சிகள் எடுத்த போதும், அது கைகூடவில்லை.

இந்த நிலையில் ஜனாதிபதியை சந்தித்து விரிவாக கலந்துரையாடல் நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தாம் ஜனாதிபதியுடன் இதுவிடயமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்த மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், குறித்த காணிகளை விரைவாக விடுவிக்க இராணுவத் தளபதி ஜனாதிபதியிடம் உறுதியளித்திருப்பதாகவும் நேற்று எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.

Related posts

Nigeria air strike error kills dozens in refugee camp

Mohamed Dilsad

Twenty dead in attempted breakout from Brazil prison

Mohamed Dilsad

ඩෙංග රෝගීන් 59760ක් පිලිබඳ තොරතුරු

Mohamed Dilsad

Leave a Comment