Trending News

எரிபொருள் விலை அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, லங்கா இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனமும் தமது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

அதன் ஊடக அறிக்கையின் படி, நேற்று நள்ளிரவுடன் புதிய விலைகள் அமுலுக்கு வந்துள்ளன.

இதன்படி,Lanka Auto Diesel லிற்றர் ஒன்றின் புதிய விலை 118 ரூபா

Xtra MILE லிற்றர் ஒன்றின் புதிய விலை 122 ரூபா

Lanka Super Diesel (Euro 4) லிற்றர் ஒன்றின் புதிய விலை 129 ரூபா

Lanka Petrol 92 Octane லிற்றர் ஒன்றின் புதிய விலை 146 ரூபா

Xtra Premium (EURO3) லிற்றர் ஒன்றின் புதிய விலை 149 ரூபா

Xtra Premium 95 (EURO 4) லிற்றர் ஒன்றின் புதிய விலை 158 ரூபா

அதேநேரம், நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

137 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அதன் புதிய விலை 145 ரூபாவாகும்.

148 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் 7 ரூபா அதிகரிப்புடன் 155 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒடோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒடோ டீசல் லீற்றர் ஒன்று 118 ரூபாவிற்கும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 129 ரூபாவிற்கும் விலை செய்யப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

India grants Rs. 275 mn to develop Eastern University

Mohamed Dilsad

Indonesian Naval ship docks in at Colombo Port

Mohamed Dilsad

Looming hurricane sparks Trump warning

Mohamed Dilsad

Leave a Comment