(UTV|COLOMBO)-நாட்டின் கிழக்குப் பகுதிகளில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக மலைநாட்டு மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கெரட், போஞ்சி லீக்ஸ் தக்காளி போன்ற மரக்கறிவகைகள் ஒரு கிலோ 400ரூபா வரை விற்பனையாகின்றன.
அத்தோடு அதிகூடிய விலையில் விற்பனை செய்யப்பட்ட உள்நாட்டு மரக்கறிகளான கத்தரிக்காய் பயற்றங்காய் மற்றும் கோவா போன்றவற்றின் விலை குறைந்து ஒரு கிலோ 200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு தேங்காய் ஒன்றின் விலை 40 தொடக்கம் 75 ரூபா வரையும் பச்சை மிளகாய் ஒரு கிலோ 240 ரூபா வரையும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் விலை அதிகரிப்பு மலைநாட்டு வியாபாரிகளுக்கு சாதகமானதாக காணப்பட்ட போதிலும் மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு பெரும் சிரமமாகவே அமைகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]