(UDHAYAM, COLOMBO) – கேகாலை – கரடுபன வீதியில் அருகாமையில் பெண் ஒருவரின் சடலத்தை காவற்துறையினர் இன்று அதிகாலை மீட்டுள்ளனர்.
குறித்த பெண் 35 – 40 வயதுக்கு உட்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சடலம் தற்போது கேகாலை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கேகாலை காவற்துறை தெரிவித்துள்ளது.