(UDHAYAM, COLOMBO) – கண்டி கெடம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடுகன்னாவையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தொன்று, யஹதென்னவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தின் பின்னால் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் கண்டி மருத்துவனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெறும் போது இரண்டு பேருந்துகளிலும் அதிகளவு பயணிகள் இருந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பில் கண்டி காவற்துறை மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளது.