(UTV|ERITREA)-எரித்திரியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் இடையே நிலவிய நீண்ட காலப் பகையின் பின்னர், இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகள் மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ளன.
எரித்திரிய தலைநகர் அஸ்மராவில் நடைபெற்ற கூட்டத்தின்போது, எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மட் (Abiy Ahmed) மற்றும் எரித்திரிய ஜனாதிபதி இசையாஸ் அவ்வேர்கி (Isaias Afwerki) ஆகிய இருவரும் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.
இரண்டு கிழக்காபிரிக்க அயல் நாடுகளின் தலைவர்கள், கிட்டத்தட்ட 20 வருட காலத்தில் முதல் தடவையாக சந்தித்துள்ளனர்.
எல்லை தொடர்பில் 1990ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, அவர்களது உறவினர்கள் வெ்வேறாகப் பிரிந்தனர்.
இந்தநிலையில், 2000ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
2 வருடங்களின் பின்னர், பேட்மி நகரம் உட்பட சர்ச்சைக்குரிய நிலத்தை எரித்திரியாவுக்கு வழங்குவதான எல்லை நிர்ணயிப்புச் சபையின் இறுதித் தீர்ப்புக்கு எத்தியோப்பியா மறுப்பு தெரிவித்தது.
அன்றிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது.
நாடு எல்லை நிர்ணயிப்புச் சபையின் தீர்ப்பை தனது ஏற்கும் என எரித்திரிய தலைநகருக்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் அபி, நேற்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தமது தலைநகரங்களில் தூதரங்களை அமைப்பதற்கும் தாம் இணங்குவதாக இரு நாட்டுத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]