Trending News

பிரபுதேவா படத்தில் பாகுபலி வில்லன்

(UTV|INDIA)-ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பாகுபலி படத்தில் வில்லனாக காலகேயர் தலைவன் இன்கோசி கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபாகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திலும் பிரபாகர் வில்லனாக நடிக்க இருப்பதாகவே கூறப்படுகிறது.

இதில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜும், முக்கிய கதபாத்திரங்களில் இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அன்பறீவ் இப்படத்திற்கு சண்டை காட்சிகளை அமைக்கிறார். டிக் டிக் டிக் படத்தை தயாரித்த ஜபக் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
‘பிரபுதேவா போலீஸாக நடிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்றும், இந்த படம் பிரபுதேவாவின் திரையுலக பயணத்தில் திருப்புமுனை படமாக அமையும்’ என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் இயக்குநர் முகில். இவர் பிரபுதேவாவின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ඡන්දය ප්‍රකාශ කිරීමට දැඩි උනන්දුවක්

Editor O

இலஞ்சம் வழங்க முற்பட்ட நபரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Mohamed Dilsad

Suspect arrested over killings of Policemen at checkpoint

Mohamed Dilsad

Leave a Comment