Trending News

பாராளுமன்ற உறுப்பின் பதவி எதற்கு? விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சுவரொட்டிகள்

(UTV|JAFFNA)-“வித்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்றிய குற்றவாளி” எனவும் தனது “அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர்” மற்றும் “இவருக்கு எம்.பி பதவி எதற்கு?” என்ற வாசகங்களை உள்ளடக்கி முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக யாழ் நகரில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இன்று (9) காலை குறித்த சுவரொட்டிகள் யாழ் நகரப்பகுதிகள் எங்கும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதுடன் இந்த சுவரொட்டியை வெளியிட்டவர்கள் நாளைய தலைமுறை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை தமிழ்த்தலைவி என குறிப்பிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டியில் என்றும் நாம் உங்களுடன் தமிழ் பேசும் மக்கள் என பெயரிட்டு சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த ஒட்டப்பட்டிருந்தன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Theresa May suffers three Brexit defeats in Commons

Mohamed Dilsad

இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் மேலும் இரு கடற்படையினர் கைது

Mohamed Dilsad

Prevailing showery condition in Eastern Province to enhance – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment