(UDHAYAM, COLOMBO) – ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ‘சிறந்த பத்து’ முறைப்பாட்டின்கீழ், 8 ஆவது முறைப்பாட்டை இன்று பதிவு செய்துள்ளது.
கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை பிரிவு மற்றும் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் ஆகியவற்றிலே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பாதீட்டின் ஊடாக இலங்கை சுங்கத் திணைக்களத்துக்கு 25 ஆயிரம் மில்லியன் ருபா வருமானத்தை இல்லாமல் செய்தமை தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
‘சிறந்த பத்து’ முறைப்பாட்டின்கீழ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், அமைச்சர்களான தலதா அத்துகொரல, மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாஸிம், பீ. ஹரிசன் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.