Trending News

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தாய்லாந்து குகை – 12 சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் பாதுகாப்பாக மீட்பு

(UTV|THAILAND)-உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வான தாய்லாந்து குகை ஒன்றில் காணாமல் போன 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் சுமார் 3 வாரங்களின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

11-16 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் வடக்கு தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை சுற்றிப் பார்க்க கடந்த ஜூன் 23 அன்று உள்ளே சென்றுள்ளனர். மழை காரணமாக குகையினுள் நீர் சென்றதால் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

இதனையடுத்து, தாம் லுவாங் குகையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தேடுதல் பணிக்கு பிறகு குறித்த 13 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக கண்டறியப்பட்டது.

இந்நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுழியோடிகளை கொண்ட மீட்பு பணியாளர்களை உள்ளடக்கி கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளில் 13 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீட்புப் பணிகளில் தாய்லாந்து கடற்படையினர் (Navy SEAL) பிரதானமாக ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 சிறுவர்கள் ஆரம்பக்கட்டமாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமான மீட்புப் பணிகளின் போது இன்னும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இந்நிலையில் 5 பேர் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் போது எஞ்சிய 5 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், தாய்லாந்தின் கால்பந்தாட்ட குழு காணாமல் போனமை முழு உலகின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்நிலையில் இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டால், எதிர்வரும் 15ம் திகதி இடம்பெறும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியை பார்வையிட FIFA அதிகாரிகளால் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இவர்களது உடல் நிலை காரணமாக குறைந்தது 7 நாட்களுக்கு வைத்தியசாலையில் இருக்குமாறு வைத்திய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு உலகக்கிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டியை கண்டுகளிக்க முடியாமல் போகின்றது. எனினும், எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை அவர்களுக்கு வழங்குவது தொடர்பில் FIFA அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து சிறுவர்களின் பாதுகாப்பான மீட்பை உலகமே கொண்டாடி வரும் நிலையில் இதற்கு பின்னால் ஒரு சோக சம்பவமொன்றும் பதிவாகியிருந்தது. அது மீட்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த தாய்லாந்து கடற்படை முன்னாள் வீரர் சமன் குனானின் இறப்பு செய்தியாகும். 38 வயதான இவர் மீட்பு நடவடிக்கைகளுக்காக ஒக்சிஜன் தாங்கிகளை குகைக்குள்ளே வளங்கிவிட்டு மீண்டும் வெளியே வரும் போது உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. சமன் குனான் தற்பொழுது அவரது குடும்பத்தினர் மற்றும் முழு உலக மக்களாலும் ஒரு ஹீரோவாக நினைவுபடுத்தப்படுகின்றார்.

– நுஸ்கி முக்தார் –

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

புகையிரத தொழிற்சங்கங்கள் திடீர் வேலை நிறுத்தம்

Mohamed Dilsad

Korea Eximbank approves USD 14 million for Sri Lanka

Mohamed Dilsad

Court issues overseas travel ban on Patali

Mohamed Dilsad

Leave a Comment